Friday, August 3, 2012

காதல் பயணம்

அன்று ஓர் இரவுப் பொழுதில்
திடீரென்று பெய்த அடை மழையில்
நாம் இருவரும் முழுதும்
நனைந்த நிலையில்
அருகில் இருந்த பேருந்து நிழற்கொடையில்,
தனிமையில்
உந்தன் நனைந்த துப்பட்டாவால்
எந்தன் தலைமுடியை
துவட்டிய தருணம்..!!!

எதிர்பாராத கனவு.

மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நீரில் குளித்துவிட்டு
வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு
துவட்டிய துண்டை
தலைமுடியில் கட்டிக்கொண்டு
நனைந்த உடல் ஈரம் காயும் முன்
நீ என்னருகில் வந்து என்னை
எழுப்பும் தருணம்...!
கனவுகள் இன்றியமையாதது..

அவளாகிய அவள்.

கடற்கரை ஓரத்தில்
அத்தனைபேர் மத்தியில்
அருகருகே நடந்து சென்றபோது
வராத வெட்கம்,
தன்னந்தனியே யாருமில்லா  
இடத்தில் உன்னருகே  
நெருங்கும்போது மட்டும்
வருவதேன்...!!!

என்னவள்..


எண்ணெய் அப்பிய தலைமுடியுடனும்
ஒற்றை வெள்ளை செவ்வந்தி பூவுடனும்
நெற்றியில் சிறிய விபுதி பொட்டுடனும்
உனக்கு சற்றே ஒத்துவராத அந்த
நீல நிற நம் கல்லூரி சீருடையுடனும்
ஒற்றை தோளில் புத்தக பையுமாய்
குனிந்த தலையுமாய்
கையில் இரண்டு புத்தகத்துடனும்
பேருந்துக்காக நீ நடந்த வந்த அந்த நொடிப்போழுதே
என் காக்கி இதயம் போர்க்களமாகி விட்டது.!!!

Thursday, June 7, 2012

மனதில் நின்ற வரிகள்.


வாழும் வரை போராடு, வழி உண்டு என்றே பாடு..
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே,
மழை என்றும் நம் காட்டிலே...
# வைரமுத்து