Friday, August 3, 2012

என்னவள்..


எண்ணெய் அப்பிய தலைமுடியுடனும்
ஒற்றை வெள்ளை செவ்வந்தி பூவுடனும்
நெற்றியில் சிறிய விபுதி பொட்டுடனும்
உனக்கு சற்றே ஒத்துவராத அந்த
நீல நிற நம் கல்லூரி சீருடையுடனும்
ஒற்றை தோளில் புத்தக பையுமாய்
குனிந்த தலையுமாய்
கையில் இரண்டு புத்தகத்துடனும்
பேருந்துக்காக நீ நடந்த வந்த அந்த நொடிப்போழுதே
என் காக்கி இதயம் போர்க்களமாகி விட்டது.!!!

No comments:

Post a Comment